இந்தியா உள்ள உத்தரகாண்டில் Silkyara மற்றும் Barkot இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12 அன்று விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் விபத்து நடந்த சுரங்கபாதையிலேயே சிக்கியும் அவர்களை இன்றளவிலும் மீட்க இயலவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.
தீபாவளி திருநாளில் நாடே ஒளிமயமாக இருந்த அந்த நேரத்தில் இந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் இருளில் சிக்கி தவித்தது கவலைக்குறியதாக உள்ளது. மேலும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று நவம்பர் 18 அன்று மீட்பு பணியும் நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் , சுரங்கப்பாதையில் ஏற்பட்ட குப்பைகளை அகற்றும் போது அடுத்தடுத்து குப்பைகள் விழுவதாலும் துளையிடும் கனரக இயந்திரங்களை கொண்டு துளையிடும் சமயத்தில் சுரங்கத்தில் விரிசல் ஏற்பட்டு மேலும் மேலும் இடிவதால் மட்டுமே மீட்பு பணி நிறுத்தப்பட்டது என்று அரசாங்க நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டுமான நிறுவனம் NHIDCL வும்,பாதுகாப்பு அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
மேலும் சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் , உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை குழாய் போன்ற அமைப்பில் வைத்து அனுப்பப்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களின் நிலைமையை கண்டு கண்ணீருடன் தவிப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
இவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் முடிந்தவரை பிராத்தனை செய்து கொள்வோம்!!