உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது?

அனைத்துலக விமான நிலைய மன்றம் 2024 ஆம் ஆண்டில் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.தரவரிசை பட்டியல் உள்நாட்டு சேவைகள், வெளிநாட்டு சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையத்துக்கு 2024 ஆம் ஆண்டு 108.1 மில்லியன் பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு மிகப் பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையை அமெரிக்காவின் Georgia மாநிலத்தில் உள்ள Hartsfield-Jackson Atlanda அனைத்துலக விமான நிலையம் சேர்த்துள்ளது.
அது 26 முறையாக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் :
▫ Hartsfield-Jackson Atlanda , அமெரிக்கா
பயணிகள் : 108.1 மில்லியன்
▫ Dubai ,ஐக்கிய அரபுச் சிற்றரசு கள்
பயணிகள் : 92.3 பில்லியன்
▫ Dallas Fort Worth, அமெரிக்கா
பயணிகள் : 87.8 மில்லியன்
▫ Haneda விமான நிலையம்,ஜப்பான்
பயணிகள் : 85.9 மில்லியன்
▫ Heathrow விமான நிலையம், பிரிட்டன்
பயணிகள் : 83.9 மில்லியன்
சர்வதேச விமானச் சேவைகளைப் பொறுத்தவரை துபாய் விமான நிலையம் மிகச் சுறுசுறுப்பாக இருந்தது.
இந்நிலையில் நோய்ப்பரவலுக்கு முந்தைய காலத்தை விட சிறப்பான நிலையில் பயணத்துறை உள்ளதாக அனைத்துலக விமான நிலைய மன்றம் கூறியது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பயணிகளின் மொத்த எண்ணிக்கை 9.5 பில்லியனாக இருந்தது.
இது 2019 ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையை விட 3.8 சதவீதம் அதிகம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan