சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு வயது வரம்பு என்ன? வயது அதிகமாக இருந்தால் சிங்கப்பூர் செல்ல முடியுமா?

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு வயது வரம்பு என்ன? வயது அதிகமாக இருந்தால் சிங்கப்பூர் செல்ல முடியுமா?

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு வயது வரம்பு என்ன? வயது அதிகமாக இருந்தால் சிங்கப்பூர் செல்ல முடியுமா? என நமது பாலோவர்ஸ் கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கான பதிலை இப்பதிவில் தெளிவாக காண்போம்.

சிங்கப்பூர் செல்வதற்கான வயது வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

60 வயது வரை கூட சிங்கப்பூர் வேலைக்கு செல்லலாம்.

ஆனால் ஒரு சில நிறுவனங்கள் பெரும்பாலும் இளம் வயதினரையே வேலைக்கு எடுக்கின்றனர்..அதற்கு காரணம் இளம் வயதினர் சுறுசுறுப்பாக வேகமாக வேலை செய்வார்கள் என்று எண்ணுகின்றனர்.

வயதானவர்களை எடுக்காமல் இருப்பதற்கான கரணம் என்னதான் அவர்களிடம் அனுபவம் இருந்தாலும் வயது முதிர்ச்சி காரணமாக மெதுவாக வேலை செய்வார்கள் என்று எண்ணுகின்றனர்.

அதோடு உடல்ரீதியாக ஏதேனும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருப்பதால் சில நிறுவனங்கள் இளம் வயதினரையே தேர்ந்தெடுக்கின்றனர்.

நிறுவனங்கள் வயது வரம்பை நிர்ணயித்துள்ளனர்.அதனால் அந்த வயது வரம்புக்கேற்ப ஆட்களை எடுக்கின்றனர்.

ஓர் உதாரணமாக ,ஒரு சில நிறுவனங்கள் 38 வயது வரையும்,இன்னும் ஒரு சில நிறுவனங்கள் 45 வயது வரைக்கும் எடுக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளனர்.அதன்படியே ஆட்களை எடுக்கின்றனர்.

Work பெர்மிட்டில் செல்வதற்கான வயது வரம்பை 61 வயது வரை mom உயர்த்தியுள்ளது.இந்த புதிய நடைமுறை ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும்.

அதிக வயதில் நீங்கள் முதல்முறையாக சிங்கப்பூருக்கு செல்வதாக இருந்தால் அதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.இதே நீங்கள் சிங்கப்பூர் U -TURN ஆக இருந்தால் அதிக வயதாக இருந்தாலும் சிங்கப்பூர் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.