சிங்கப்பூர் வருவதற்கு S-Pass, E Pass, Dependent Pass, Tourist Visa, Work permit PCM permit போன்றவற்றின் மூலம் வரலாம். அதேபோல் சிங்கப்பூர் வருவதற்கு மற்றொரு வழியும் இருக்கிறது.
அதுதான் Skillet Test.
நம்மில் சிலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? டெஸ்ட் எங்கே அடிக்க வேண்டும்? என்பதே தெரியாமல் இருக்கிறது. அதனைப் பற்றி விரிவாக காண்போம். டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வரலாம். E-Pass, S-Pass போன்ற பாஸ்கள் மூலம் வருவது சிறந்த முறை தான்.
ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு சில ஏஜென்ட்கள் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர். இன்னும் ஒரு சில ஏஜென்ட்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு காலம் தாமதமாக்கின்றனர். போலி ஏஜென்ட்கள் இருக்க தான் செய்கின்றனர்.
டெஸ்ட் அடித்து வருவது பாதுகாப்பான வழி. ஆனால் உங்களுக்கு தெரிந்த ஏஜென்ட் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் இருந்து உங்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்தால் S-Pass, E-Pass போன்ற பாஸ்கள் மூலம் சிங்கப்பூர் வருவதும் நல்லது.
அப்படி யாரும் இல்லையென்றால் நீங்க டெஸ்ட் அடித்து வருவது சிறப்பான வழி. உங்களுக்குத் தெரிந்த ஏஜென்ட் அல்லது தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்றால் டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வரலாம்.
டெஸ்ட் அடிப்பது :
எந்த வேலைக்காக நம்மை தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த வேலைக்காக Training கொடுப்பார்கள். அதன் பின் தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பார்கள்.
சிங்கப்பூர் நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கவிருக்கும் ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் லெவி கட்டுவார்கள். லெவிக்கான கட்டணம் குறையும். அதற்கு பெயர் தான் டெஸ்ட் அடித்து வருவது.
டெஸ்ட் அடித்து வருவதில் மிக முக்கியமான பலன். இதில் ஏமாறும் வாய்ப்புகள் கிடையாது.
ஏனென்றால், ஏஜென்டிடம் முழு பணத்தையும் கொடுக்க போவது கிடையாது. ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கேட்பார்கள். இக்கட்டணத்தை ஏஜென்டிடம் கொடுக்கப் போவது கிடையாது.
நாம் எந்த Institutes- இல், டெஸ்ட் அடிக்கிறோமோ அங்கேயே கொடுக்கலாம். நான் அங்கு நேரடியாக செல்வதால் ஏமாறும் வாய்ப்பு கிடையாது.
டெஸ்ட் அடித்தாலே சிங்கப்பூருக்கு வந்துவிடலாம். டெஸ்ட் அடித்து பாஸ் ஆனதுக்கு பிறகு, Skillet Test Certificate கொடுப்பார்கள். அதனை கம்பெனிகளில் கொடுத்து சிங்கப்பூர் வேலைக்கு வந்துவிடலாம்.
Skillet Test Certificate 10 ஆண்டு வரைச் செல்லுபடியாகும்(Validity). முதல் முறை வரும்பொழுது அதிக கட்டணம் செலவாகும். அடுத்த முறை செல்லும் பொழுது மிக குறைவாக செலவாகும்.
குறைகள் :
வேலைக் கடினமாக இருக்கும். Worker பெர்மிட் மூலம் மட்டுமே வர முடியும். S-Pass, E-Pass மூலம் படித்தவர்கள் மட்டுமே வரலாம் என்று நினைப்பவர்கள் இருக்கின்றனர்.
ஆனால்,நன்கு படித்து பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட டெஸ்ட் அடித்து Worker பெர்மிட்டில் வருபவர்களும் இருக்கின்றனர்.
அவர்கள் Worker பெர்மிட்டில் மூலம் வந்து குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கடினமாக உழைத்து அதன் பின் அவர்களுடைய கல்வித் தகுதியை கம்பெனியிடம் காண்பித்து அவருக்கான தகுதி வேலையைப் பெற்றவர்களும் இருக்கின்றனர்.
நாம் எந்த பெர்மிட் மூலம் வந்தாலும் சாதிக்கிறோமா இல்லையா என்பதே முக்கியம். இந்த வேலை நமக்கு சரியானதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது.
டெஸ்ட் அடிக்கும் இடத்தில் மற்றவர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள், அவர்கள் என்னென்ன வேலை பார்க்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அதன்பின் அந்த வேலை உங்களுக்கு சரியானதா? இல்லையா? என்பதை முடிவு செய்யுங்கள்.
முன்பே பணத்தைக் கட்டி விடாதீர்கள். அல்லது நீங்கள் பணத்தைக் கட்டிய பிறகு உங்களுக்கு சரியானதாக இல்லை என்று தெரிந்தால் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு குறைவான கட்டணம் கட்டுவீர்கள். ஒரு சில Institutes பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பொழுது ஒரு நாளுக்கான கட்டணத்தைப் பிடித்தம் செய்து கொடுப்பார்கள்.
டெஸ்ட் அடிப்பதில் என்னென்ன Subjects :
👉 Steel Rain Forcement Work
👉 Electrical & Wiring
👉 Plumbing & Fitting
👉 Aircon
👉 Interlocking block
👉Waterproof
என பல Subjects இருக்கிறது. இவைகள் அதில் மிக முக்கியமானவை. இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதற்கு தான் உங்களுக்கு Training கொடுப்பார்கள்.
ஒரு மாதம் அல்லது மூன்று மாதம் வரை Training கொடுப்பார்கள். நீங்கள் எந்த அளவுக்கு வேகமாக கற்றுக் கொள்கிறீர்களோ அதைப் பொருத்தும் அமையும்.
Training கொடுத்த பின் Main Test க்கு அழைத்துச் செல்வார்கள்.Main Test-இல் Practical, Theory இருக்கும்.Practical மிக முக்கியமான ஒன்று.
அவர்கள் கொடுக்கின்ற நேரத்தில் Project -யை முடிக்க வேண்டும். இதனை Examine செய்வதற்காக சிங்கப்பூரிலிருந்து வந்திருப்பார்கள்.
அவர்கள் கொடுத்த நேரத்தில் எந்த ஒரு பிழையும் இல்லாமல் முடித்திருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் Pass. அதன்பின் Skillet Test Certificate கொடுப்பார்கள்.
நீங்கள் செய்ததில் ஏதேனும் பிழைகள் இருந்தால், நீங்கள் Re-Test அடிக்க வேண்டும். இதற்கு குறைவானக் கட்டணமே செலவாகும்.