பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை?

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை?

இவ்வாண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25-ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. சைவக் கடவுளாகிய முருகப்பெருமானுக்குரியா சிறப்பு விரத நாளாக கொண்டாடப்படுகிறது.இது மிக முக்கியமான நாளாக பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது.


தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இதனை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவர்.

தமிழ் மாதங்களில் 12-ஆவது மாதமான பங்குனியும்,12-ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாளே பங்குனி உத்திர திருவிழா.

திருமணம் ஆகாத பெண்கள் பங்குனி உத்திரத்தன்று கல்யாண விரத்தை கடைபிடித்து அருகே உள்ள கோவில்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் திருமண வைபோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.