AI துறையில் இந்தியாவின் அடுத்த திட்டம் என்ன..???
![](https://www.sgtamilan.com/wp-content/uploads/2025/02/What-is-Indias-next-plan-in-the-field-of-AI-1024x538.jpeg)
தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்காக இந்தியா AI MISSION என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இத்திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் AI மேம்பாட்டிற்கான மென்பொருள் மற்றும் வன்பொருள் தேவைகளுக்குத் தயாராகுதல் மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம்:
இந்தியாவில், சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் துறை சார்ந்த திறன்கள் அதிகமாக இருந்தாலும், ஹார்டுவேர் எனப்படும் வன்பொருள் சார்ந்த திறன்களில் பின்தங்கியுள்ளன. அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் வாய்ப்புகளை வலுப்படுத்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.
இதனால் AI துறையின் வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் நிதியாண்டில் அதற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மருத்துவம், விவசாயம், கல்வி மற்றும் அதற்கான தொழில்நுட்ப திறன் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை உருவாக்க முடியும். மேலும் தொழில்நுட்ப திறனுடைய பல பேரை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.
AI துறையில் இந்தியாவின் அடுத்த திட்டம்:
உலக அளவில் AI துறையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
AI துறையில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பள்ளி பருவத்தில் ரோபோடிக்ஸ், கோடிங்,AI போன்றவற்றில் மாணவர்களின் புரிதலையும் திறனையும் உருவாக்க, அடல் டிங்கரிங் லேப்களில் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு துறைகள் தவிர தனியார் நிறுவனங்களும் AI துறையை விரும்புகின்றன.அந்த வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத்தின் ஜாம் நகரில் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை அமைக்கும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெரிய அதிபரான அதானி,AI துறையில் அதிக முதலீடுகளை அறிவித்துள்ளார்.OPEN AI தலைவர் சாம் ஆல்ட்மேன் இந்தியா சென்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஹ்னாவை சந்தித்தார்.
அவர்கள் குறைந்த விலை AI மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் GPU மேம்பாடு உள்ளிட்ட பல குறித்து விவாதித்தனர்.
மேலை நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து AIக்கு மாறுகின்றன.AI தொழில்நுட்பம் பின்பற்றத் தொடங்குவதால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த போக்கு இந்தியாவில் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan