லிட்டில் இந்தியாவில் தனது வீடுகளை வாடகைக்கு விட்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி!!

லிட்டில் இந்தியாவில் தனது வீடுகளை வாடகைக்கு விட்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு சொந்தமான 3 வீடுகளை Airbnb – இல் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டதால் 175,000 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு சொந்தமான மூன்று வீடுகளும் லிட்டில் இந்தியாவில் உள்ள கிந்தா ரோட்டில் அமைந்துள்ளது. அந்த மூன்று வீடுகளையும் ஜெயந்தி பொன்னுசாமி மணியன்(வயது 52) என்பவர் airbnb தளத்தில் வாடகைக்கு விட்டிருந்தார்.

அந்த மூன்று வீட்டுகள் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடையும்,மற்ற ஐந்து தளத்திலும் வீடுகள் உள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் மூன்று வீடுகளை கிட்டத்தட்ட 489 முறை வாடகைக்கு விட்டுள்ளார்.

ஜெயந்தி சுமார் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இவ்வாறு செய்து வந்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வீடுகளை வாடகைக்கு விட்டு சுமார் 162000 வெள்ளி லாபத்தை ஈட்டியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்ய தவறியுள்ளார். முறையான அனுமதி இன்றி வீடுகளை வாடகைக்கு விட்டு லாபத்தை ஈட்டி வந்துள்ளார்.

Airbnb – இல் வீடுகளை விளம்பரம் செய்து Maybank எனும் வங்கி கணக்கு வழியாக தனக்கு வர வேண்டிய வாடகையை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறு குறுகிய காலத்திற்கு வீடுகளை வாடகைக்கு விடுவது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் சட்டவிரோதமான செயல் என்று Airbnb ஜெயந்தியிடம் கூறியது.

அதன் பிறகு ஜெயந்தி அவ்வாறு செய்வதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக 175,000 வெள்ளிக்கு மேல் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஜெயந்திக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் அவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.