விமானம் புறப்பட்ட பிறகு என்ன நடந்தது?துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது எப்படி?
ஏப்ரல் 26 அன்று, நியூயார்க்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் போது, புறப்பட்ட சிறிது நேரத்தில் எதிர்பாராதவிதமாக அவசரகால வெளியேறும் ஸ்லைடு விமானத்திலிருந்து கீழே விழுந்தது.
விமானத்தில் 183 பயணிகள் இருந்தனர். அவர்களுடன் இருந்த விமான ஊழியர்கள் JFK சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரகால நிலையை தெரிவித்தனர்.JFK சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
விமான சேவையில் இருந்து போயிங் 767 விமானம் நீக்கப்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பே மிக முக்கியம் என்று டெல்டா ஏர்லைன்ஸ் கூறியது.
டெல்டா ஏர்லைன்ஸ் இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து வருகிறது, மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அதிகாரிகளுடன் விசாரணைக்காக ஒத்துழைப்போம் என்றும் தெரிவித்தது.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg