16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று(மே-29) நடைபெற்றது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. பந்து வீட்சை சென்னை அணி தேர்ந்தெடுத்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைச் சென்னை அணி தட்டி சென்றது.
“தனது ஓய்வு அறிவிப்பு´´ குறித்துக் கூற இதுதான் சரியான தருணம் என வெற்றிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி பேசினார்.
“ என் ஓய்வு அறிவிப்பை கூற இது சிறந்த தருணமாக இருக்கலாம். நன்றி சொல்லிவிட்டு ஓய்வு பெறுவது மிகவும் எளிது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், நான் அடுத்த 9 மாதங்கள் உழைத்து, அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாட முயற்சிப்பேன். ரசிகர்கள் என் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். இன்னும் ஒரு சீசனில் விளையாடுவது அவர்களுக்கு எனது பரிசாக இருக்கும்´´ என்றார்.