வரும் டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியா மற்றும் தைவான் நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து நாட்டுக்கு வருகை புரியலாம். இந்த இருநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கான விசாவை தள்ளுபடி செய்ய போவதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் 30 நாட்களுக்குள் விசா இல்லாமல் அங்கு நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சீன சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழையலாம் என்றும், விசாவை ரத்து செய்துள்ளதாகவும் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது.இந்நிலையில் இந்தியா மற்றும் தைவான் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விசாவை ரத்து செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
தாய்லாந்துக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை சுமார் 22 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு சுமார் 28 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து தாய்லாந்துக்கு வரவழைப்பதே தாய்லாந்து அரசாங்கத்தின் நோக்கமாகும்.