சிங்கப்பூரில் எளிதாக கிடைக்கும் வேலைகள் என்ன?
சிங்கப்பூரில் எளிதாக கிடைக்கும் வேலைகள் என்ன?
நீங்கள் சிங்கப்பூரில் வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் வேலை கிடைப்பது என்பது பலருக்கும் எட்டாக்கனியாகத்தான் உள்ளது.
அதற்கு மிகவும் முக்கியமான காரணம் மனிதவள அமைச்சால் கொண்டுவரப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் தான்.
தற்போதைய சூழ்நிலையில் E-Pass, S-Pass, NTS Permit இதன் மூலம் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், அதிகரித்துள்ள சம்பள உயர்வு.
நீங்கள் இது போன்ற வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் பல மாதங்கள் அல்லது வருட கணக்கில் கூட காத்திருக்க வேண்டிய கட்டாயம் வரலாம்.
அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இதற்கான ஏஜெண்டுகளிடம் கட்ட வேண்டிய தொகையும் அதிகரித்துள்ளது.
எனவே நீங்கள் எளிமையான முறையில் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வேலை
TEP Pass
PCM Permit
Shipyard Permit
இதில் உங்களுக்கு சம்பளம் குறைவாகவே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பர்மிட்டியில் நீங்கள் செல்லும் பொழுது அதிகமான ஏஜென்ட் தொகை செலுத்த வேண்டாம்.
எனவே உங்களுக்கு வேலை கிடைக்க கடினமாக இருந்தது என்றால் இந்த பர்மீட்டுகளில் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Follow us on : click here