சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை வாய்ப்புள்ளது.

பகல் மற்றும் சில நாட்களில் நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

சுமத்திராவிலிருந்து பலத்த காற்று வீசுவதன் காரணமாக சிங்கப்பூரில் ஒரு சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

அதோடு பலத்த காற்று வீசலாம். இதனை சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப்பொழிவு சராசரி அளவைவிட அதிமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெரும்பாலான நாட்களில் அதிகப்பட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.சில நாட்களில் 34 டிகிரி செல்சியஸைத் தாண்டும்.