சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூரின் சில பகுதிகளில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சில நாட்களில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மழைப்பொழிவானது முதல் இரண்டு வாரங்களில் அதன் மொத்த மழைப்பொழிவின் சராசரியைவிட அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

வெப்பநிலை நிலவரம் :

தினசரி அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சில நாட்களில் 34 டிகிரி செல்சியஸை தாண்டும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வானிலை முன்னறிவுப்புகளை www.weather.gov.sg அல்லது www.nea.gov.sg இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Follow us on : click here ⬇️