பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!!

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரின் அரையிறுதிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
குறிப்பாக இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் 242 ரன்களை சேஸ் செய்த விராட் கோலி சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
இந்நிலையில் சதம் அடித்த விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.அதே நேரத்தில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவின் ஆட்டம் பாராட்டப்படாமல் போனதாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்தார். இடுப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப்பை இந்திய ரசிகர்கள் யாரும் பாராட்டவில்லை என அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார். உண்மையில், பந்துவீச்சில் கிங் விராட் கோலியைப் போலவே குல்தீப்பும் திறமையானவர் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் கூறியதாவது: “ஒரு சுழற்பந்து வீச்சாளர் காயத்திற்குப் பிறகு மீண்டும் திரும்புகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் நம் நாட்டில் பந்துவீச்சாளர்களைப் பார்க்கக்கூட நேரமிருக்காது.
ஆனால் ஒரு பேட்ஸ்மேன் காயமடைந்து மீண்டு வந்து ஒழுங்கற்ற முறையில் விளையாடினால், அவர் காயத்தில் இருந்து தற்போது தான் மீண்டு வந்திருக்கிறார் என்று கூறுகிறோம். “விராட் கோலிக்கு அது நடந்தால், அவர் 2-3 போட்டிகளில் தடுமாறினால், கிங் விரைவில் அற்புதமாக விளையாடுவார் என்று அனைவரும் கூறுவார்கள்.
குல்தீப் யாதவ் அப்படிப்பட்ட ஒரு திறமையான வீரர். அவர் தனது திறமையான பந்துவீச்சை உலகிற்கு நிரூபித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களான எங்களின் வாழ்க்கை 2 நிமிடங்களில் மாறிவிடும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் அதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். சல்மான் ஆகா போன்ற பேட்ஸ்மேனை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அடுத்த பந்திலேயே ஷாஹீன் அப்ரிடியை குல்தீப் தனது அற்புதமான பந்துவீச்சால் தோற்கடித்தார்.அவரது காயம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு ஸ்போர்ட்ஸ் ஹெரினா பந்துவீச்சாளர்களுக்கு இடுப்புக்குக் கீழே ஏற்படக்கூடிய காயம் என்று கூறினார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் இடுப்பிலிருந்து டிரைவ் பெறுவது முக்கியம். அத்தகைய காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், மீண்டும் ஃபார்முக்கு வர சிறிது நேரம் எடுத்துக் கொள்வார்.மேலும் துபாய் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய ஆதரவு இல்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது என்று அஸ்வின் கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg