“பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதைகளை விதைக்க வேண்டும்”- பிரதமர் வோங்

“பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதைகளை விதைக்க வேண்டும்”- பிரதமர் வோங்

சிங்கப்பூர்: APEC நாடுகள் அனைவரும் வெற்றிபெற உதவும் நல்லுறவைப் புதுப்பிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

உலகமயம் பலவீனமடைந்து வருகிறது. அதே நேரத்தில் வியாபார தடைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நேரத்தில் அவர் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

APEC உச்சநிலை மாநாட்டை அடுத்து நடைபெற்ற தலைவர்களின் கலந்துரையாடலில் திரு வோங் கலந்து கொண்டு உரையாற்றினார்.

21 நாடுகள் APEC – ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

APEC உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், பொருளாதாரப் பிரிவிற்குப் பதிலாக APEC ஏன் தொடங்கப்பட்டது என்பதைப் பற்றி சிந்திக்கவும், பொருளாதார ஒருங்கிணைப்புக்கு விதைகளை விதைக்கவும் கேட்டுக் கொண்டார்.

டிஜிட்டல் ஒப்பந்தங்கள் எல்லைகள் முழுவதும் இணைப்பை மேம்படுத்த உதவுகின்றன மற்றும் தொழில் நுட்பத்தில் இருந்து வாய்ப்புகளை அணுக வணிகங்களை அனுமதிக்கின்றன.

பசுமை ஒப்பந்தங்கள் புதிய வேலைகள் மற்றும் தொழில்களை நிலைத்தன்மையில் வைத்திருக்க முடியும்.

எனவே அவர் நிலையான பொருளாதார வளர்ச்சி, பிராந்திய பொருளாதார இணைப்பு மற்றும் புதிய துறைகளில் புதிய வாய்ப்புகள் ஆகிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த அவர் அழைப்பு விடுத்தார்.