மகளிர் அணிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டம் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.
முதலில் டாஸ் வென்று பேட்டிங்கினை தேர்வு செய்த வங்கதேச பெண்கள் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை இலக்காக வைத்தது.
இதில் சமீமா சுல்தானா 17 ரன்கள், ஷோர்னா அத்தர் 28 ரன்கள், ஷோபனா மோஸ்திரி 23 ரன்கள், ஷாதி ராணி 22 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில் 115 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணியானது இரண்டாவதாக களமிறங்கியது.
இந்நிலையில், மகளிர் இந்திய கிரிக்கெட் அணியானது 16.2 ஓவர்களில், மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்த்த ஷபாலி வர்மா ரன்கள் எதுவும் எடுக்காமலேயே ஆட்டம் இழந்தார்.
மேலும், ஸ்மிரிதி மந்தனா 38 மற்றும் ஜெமிமா ரோட்ரிக் 11 ரன்கள் எடுத்தனர். ஆனால் கேப்டன் ஹர்மன் ப்ரீத் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் எடுத்து 54 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.
கேப்டனும், யாஷிகா பாட்டியா இருவரும் கடைசிவரை ஆட்டமில்லாமல் அணியின் வெற்றிக்கு காரணம் ஆயினர். இந்நிலையில், இந்திய மகளிர் அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
எனவே, ஆண்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று இந்திய பெண்கள் அணியும் நிரூபித்து காண்பித்து இருக்கின்றனர்.
ஆண்கள் கிரிக்கெட் அணியை கொண்டாடும் ரசிகர்களும், தற்பொழுது மகளிர் கிரிக்கெட் அணியை கொண்டாடி வருகின்றனர்.