மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!!

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணில் புதைந்துள்ளன.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.

மீட்பு பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொச்சினிலிருந்து கன்னுர் செல்லும் சாலை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.

நேற்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணியாளர்கள் முண்டகை பகுதிக்கு செல்ல கடும் சிரமமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மண்ணில் புதைந்து சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்து பொருட்களை கொண்டு செல்வதிலும் சவலாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ராணுவத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் வட கேரளாவில் கனமழை தொடர வாய்ப்புள்ளது என கேரளா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.