சிங்கப்பூர் காவல்துறைக்கு மோசடி புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் குறிப்பாக மின் வர்த்தக மோசடி குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு புகார்களின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 70 விழுக்காடு கூடியது.
2021-ஆம் ஆண்டில் சுமார் 2,800 மோசடிப் புகார்கள் பதிவாகின.
2022-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4,800 மோசடி புகார்கள் பதிவாகின.
இணைய வர்த்தக நிறுவனங்களின் தரத்தை ஒன்று முதல் நான்கு வரை என்று உள்துறை அமைச்சகம் வகுத்திருக்கிறது.
இணைய வர்த்தகத் தளம் ஒன்று என்றால் ஆபத்தானது.
அது 4 என்று வகைப்படுத்தப்பட்டால் மிக பாதுகாப்பானது.
ஆக பாதுகாப்பான தரநிலையை எட்டியவை :
◼️ Amazon
◼️ Lazada
◼️ Qoo10
Shopee அடுத்த நிலையில் இருக்கிறது.
ஆக குறைவான பாதுகாப்பு தரநிலையை கொண்டுள்ளவை :
◼️ Marketplace
இணைய வர்த்தக தளங்கள் புகார்களை வைத்து தரம் பிரிக்கப்படுகிறது.