Singapore Breaking News in Tamil

உஷார்….புரட்டிபோட வரும் பைபர்ஜாய் புயல்….தமிழகத்தை பாதிக்குமா?

மேற்கு இந்திய நிதி மையமான மும்பையில் இருந்து கடலில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் கடலோரப் பகுதிகளில் இருந்து 40,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றத் தொடங்கின, இரண்டு நாட்களுக்கு முன்பு சூறாவளி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மிகக் கடுமையான சூறாவளி புயல் என வகைப்படுத்தப்பட்ட பிபர்ஜாய் புயல், இந்தியாவின் குஜராத் பிராந்தியத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் தெற்கு பாகிஸ்தானில் உள்ள கராச்சி இடையே வியாழக்கிழமை நிலத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்சமாக மணிக்கு 125 முதல் 135 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், இது மணிக்கு 150 கிமீ வேகத்தில் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

திங்கள்கிழமை(ஜூன் 12) மாலை ஜுஹு கடற்கரையில் 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுவரை இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று குஜராத்தின் தெற்கே உள்ள இந்தியாவின் மேற்கு பெருநகரமான மும்பையில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரபிக்கடலில் உயரமான அலைகள், பலத்த மழை மற்றும் பலத்த காற்றுடன் குஜராத்தின் கடலோரப் பகுதிகளை தாக்கியது.

இதன் விளைவாக, மாநிலத்தின் கட்ச் மற்றும் ராஜ்கோட் மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், சுவர் இடிந்தும் மூன்று பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலோர குஜராத்தில், 8 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடலோர மாவட்டங்களில் இருந்து 20,500 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், நேற்று (ஜூன் 13) மாலைக்குள் அது முடிவடையும் என்று நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே கூறியிருந்தார்.

அண்டை நாடான பாகிஸ்தானில், துணை ராணுவப் படைகள் மற்றும் உள்ளூர் சிவில் அதிகாரிகளும் மக்களை முகாம்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு நகர்த்தத் தொடங்கினர், அவை பள்ளிகள் மற்றும் பிற அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்டன என்று காலநிலை மாற்ற அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் கூறினார்.

பாகிஸ்தான் கடற்கரையின் சில பகுதிகளில் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் நகர்த்தப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் தாயார் படுத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமை காலைக்குள் சுமார் 100,000 பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.வரும் 17-ஆம் தேதி வரை மழை எதிர்பார்க்கலாம்.சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பநிலை ஒரு சில இடங்களில் அதிகபட்சம் 40 டிகிரி வரை இருக்கக்கூடும்.இன்னும் ஒரு சில இடங்களில் 2-4 டிகிரி அதிகமாக பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.