சிங்கப்பூரில் இம்மாதம் மட்டும் சுமார் 20,000 வெள்ளி Phishing எனும் இணைய மோசடியில் இழக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போலி இணையப்பக்க இணைப்பு இருக்கும் மெசேஜ் அனுப்பப்படும்.அது Singtel நிறுவனத்தைப் போன்று தோற்றம் அளிக்கும்.
Singtel இல் மக்களுக்கு புள்ளிகள் கொடுக்கப்படும்.அதனை காலாவதி ஆகுவதற்கு முன் அதனை அந்த இணப்பின் மூலம் பரிசைப் பெறுமாறு மெசேஜில் குறிப்பிட்டிருக்கும்.
அதனைப் பெற வேண்டும் என்றால், அதெற்கென ஒரு குறிப்பிட்ட பணத்தை நிரப்ப வேண்டும்.
இதற்கு மக்கள் தங்கள் கிரெடிட் கார்டு விவரங்களையும், ஒரே முறை கடவுச்சொல்லையும் (OTP) பதிவு செய்ய வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பார்க்கும் போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொள்கிறார்கள் என காவல்துறை தெரிவித்தது.
வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை வரம்புகளை வைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.