கடந்த மாதத்தில் இருந்து , ஹோட்டல் முன்பதிவு மோசடிக்கு குறைந்தது 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மொத்த இழப்பு $41000 சிங்கப்பூர் டாலர் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதை பற்றி தெளிவான செய்தியை கீழ்காண்போம்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போலீஸ் பேட்டியில் , “Booking.com” என்ற முன்பதிவு ஆன்லைன் இணையத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு இணையத்தின் வாயிலாக மின்னஞ்சலாகவும் அல்லது அரட்டை செய்திகள் ( சாட்டிங் – chatting) வாயிலாகவும் தொடர்பு கொள்கின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை ஹோட்டல் மேலாளர்களாக பாவித்து கொண்டு மோசடியில் ஈடுபடுவதாக தெரிவித்தது.
மேலும் மோசடி செய்பவர்கள், முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு போலியான இணைப்பை (Fake link) – ஐ அனுப்பி அதில் முன்பதிவு செய்யுமாறு கேட்கப்படும்.இதை தொடர்ந்து முன்பதிவு செய்பவர்களின் “கிரெடிட் கார்டு” எண்கள் மாற்றும் வங்கி விபரங்கள் போன்ற தனிநபர் கடவு எண்கள் (Pin number) போன்ற விபரங்களை பதிவிடுமாறு கேட்கப்படும்.பொதுமக்கள் தங்களின் விபரங்களைப் பதிவிட்டவுடன் மோசடியில் உள்ளாக்கபடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த போலியான இணையதளங்களை கிளிக் (click) செய்தவுடன் பணம் செலுத்துமாறு கேட்கப்படும். பின், அதன் வாயிலாக செயல்பட்டு மோசடி நடைபெற உந்துகோலாக உள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் ,தங்களின் முன்பதிவு விபரத்திற்காக ஹோட்டல் மேலாளர்களை தொடர்புக்கொள்ளும் போது அல்லது கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து தேவையில்லாத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதை அறிந்த பின்னரே தங்களின் பணம் மற்றும் தனிபட்ட விபரங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்வதாக கூறப்படுகிறது.இதனால் ஆன்லைன் முன்பதிவு செய்பவர்களுக்கும் , பொதுமக்களுக்கும் முன்னெச்சரிக்கையாக – போலி குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை தவிர்ப்பதற்காக , அரசால் அங்கீகரிக்கப்பட்ட ” ScamShield ” – செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் மற்றும் “2FA – இரண்டு காரணி அங்கீகாரம் ( Two – Factor Authentication) “, போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் தனிநபர் வங்கி கணக்குகளுக்கு ” மல்டி பேக்டர் – பல காரணியங்கீகாரம் (Multi Factor Authentication ) போன்ற பண பரிவர்த்தனை வரம்புகளை கையால வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
முக்கியமாக , “Paynow ,போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளின் முறையான வரம்புகளை பின்பற்றவும் , மேலும் முன்பதிவு செய்பவர்கள் ஹோட்டல் மேலாளர்களை தொடர்பு கொண்டு ஹோட்டலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு தங்களின் முன்பதிவு விபரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறும் மற்றும் முறையான இணைப்புகளை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்து மோசடியில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறார்கள்.
எனவே மேற்கூறிய முறைகளின்படி பொதுமக்கள் தங்களை மோசடியில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.