சிங்கப்பூர் DORSCON எச்சரிக்கை நிலையைக் குறிக்கும் நிறம் மாற்றப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமை நிறம் மாற்றப்படும்.மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற உள்ளது.
DORSCON என்பது Diseases Outbreak Response System Condition.இது நாட்டின் சுகாதார நிலவரத்தைக் குறிக்கப் பயன்படுத்தபடும்.இதனை அமைச்சங்களுக்கு இடையிலான பணிக் குழு அறிவித்தது.
பச்சை நிறத்திற்கான அர்த்தம் கிருமிபரவல் மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதாகும்.குறைவான விழிப்பு சூழ்நிலையைக் குறிக்கும்.
கோவிட்-19 பரவல் கணிசமாக உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் குறைந்து வருகிறது.தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களிடம் நோய் தொற்று அதிகமாக கண்டறியப் படவில்லை.
அவர்களிடையே பாதிப்பும் குறைவாக உள்ளது.கடந்த 2020-ஆம் ஆண்டு கிருமி பரவல் மிக வேகமாக பரவியது.அதனை க் குறிக்கும் வகையில் எச்சரிக்கை நிலையின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாற்றப்பட்டு இருந்தது.
அன்றாட வாழ்க்கையில் அவ்வளவாக சிரமங்கள் இல்லாத நிலையிலும் எச்சரிக்கை நிலை நிறம் மாற்றப்பட்டதாக பணிக்குழு தெரிவித்தது.கடந்த 2022-ஆம் ஆண்டு நிலைமை சற்று சீரானதால் மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டது.