வர்டன் ரோடு கொலை சம்பவம்..!!ஆபத்தான ஆயுதம் ஏந்தியதாக 3 பேர் மீது புதிய குற்றச்சாட்டு!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஃபேரர் பூங்கா பகுதியில் இருக்கும் வர்டன் சாலையில் நடந்த சண்டையில் மூன்று பேர் ஆபத்தான ஆயுதத்தால் காயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக அவர்கள் மீது கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மாதம் செப்டம்பர் 22, 2024 அதிகாலையில் நடந்த சண்டை தொடர்பாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் கிம் சான் லெங் உணவு விடுதியிலும் அதன் பின்னால் இருந்த சந்துகளிலும் இருவரை நாற்காலிகளால் தாக்கியதாக நம்பப்படுகிறது.
இந்தச் சண்டையில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இக்குற்றத்தில் 22 வயதான முகமது சஜீத் சலீம் என்பவர் மீது 25 வயதான திரு. தினேஷ் வாசியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் 22 வயதான கிர்த்திக் ரோஷன் பிரேம் ஆனந்த் மீது ஆயுதத்தால் காயப்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
23 வயதான சதீஷ் ஜேசன் பிரபாஸ் மற்றும் 20 வயதான பிரதேவ் சஷி குமார் ஆகியோர் மீது ஆபத்தான ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
நூர் டியானா ஹரூன் அல் ரஷீட் மற்றும் கஸ்தூரி காலிதாஸ் மாரிமுத்து ஆகியோர் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவத்தில் திரு.நவின்ஜே C நாதன் மற்றும் திரு.K.விக்னேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
ஆயுதமேந்திய கலவர குற்றத்திற்கு 10
ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ஆயுதங்களால் காயம் ஏற்படுத்தும் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படும்.
பெண்கள் தடியடியால் தண்டிக்கப்பட மாட்டார்கள்.
Follow us on : click here