போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த 37 வயதான நபர், தென்கொரியாவின் சியோலில் ஏப்ரல் 9ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தென்கொரியாவில் அவரது தண்டனை காலம் முடிந்த பிறகு அவர் சிங்கப்பூருக்கு அனுப்பப்படுவார் என்று சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூறியது.
அதன் பிறகு சிங்கப்பூரில் அவர் மீதான போதைப் பொருள் கடத்தல் குற்றங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் telegram app-ஐ பயன்படுத்தி போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
அவரது கூட்டாளிகளான மூன்று பெண்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்களில் இருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.