பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…!!

பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க...!!

உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாற என்ன செய்யலாம். கருமை நிற உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் உதடுகளுக்கு கூடுதல் கவனம் எடுத்தாலே இளஞ்சிவப்பு நிறத்தை பெற்று விடலாம். சிலருக்கு முகம்
பளிச்சென்றும் உதடுகள் மட்டும் கருப்பாக இருக்கும்.இதற்கு புகைப்பழக்கம் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றை காரணமாகச் சொல்லலாம். பெண்கள் தங்கள் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல கெமிக்கல் நிறைந்த வண்ணத்தை உதடுகளின் மீது பூசுகின்றனர். இதனால் கூட சிலருக்கு உதடுகள் கருப்பாகும். கெமிக்கல் நிறைந்த உதட்டுச் சாயம் உதடுக்கு நல்லதல்ல.அப்படியானால் இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெற பெண்கள் இயற்கையாகவே சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.

மஞ்சள்

மஞ்சளில் இயற்கையாகவே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. காய்ச்சாத பாலுடன் சிறிது மஞ்சள் சேர்த்த கலவையை உதட்டின் மீது பூசி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்வதால் உதட்டின் நிறம் மாறும்.மஞ்சள் உதட்டுத் தோலின் மீதுள்ள இறந்த செல்களை அழிக்க வல்லது.

எலுமிச்சை

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து உதட்டின் மீது தடவி வந்தால் பளிச்சென தெரியும். எலுமிச்சை சாறு இயற்கையாகவே கருமை நிறத்தை போக்க வல்லது.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு பழத் தோலை நிழலில் ஊற வைத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடியை காய்ச்சாத பாலுடன் கலந்து உதட்டின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் மென்மையாகும்.

மாதுளை விதைகள்

உதட்டின் அழுக்கை வெளியேற்ற ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதற்கு மாதுளை பழத்தின் விதைகளை அரைத்து உதட்டின் மீது ஸ்க்ரப் செய்தால் அழுக்குகள் நீங்கி கூடுதல் நிறம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் கருமை நிறத்தை போக்கும் தன்மை இதற்கு உண்டு. உருளைக்கிழங்குச் சாற்றை உதட்டின் மீது தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவினால் நிறம் மாறும்.

ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரியின் நிறம் இயற்கையாகவே சிவப்பு தன்மை கொண்டது. ஸ்ட்ராபெரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு தினமும் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.

உதடு கருமையாக இருப்பவர்கள் இதுபோன்ற சில இயற்கையான பொருட்களை வைத்து உதட்டின் நிறத்தை மாற்றலாம். இந்தப் பராமரிப்பை மாற்றி மாற்றி செய்வதன் மூலம் உதட்டை அழகாக வைத்துக் கொள்ளலாம்.