கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது வாக்களிப்பு 31 தாதிமை இல்லங்களில் நடைபெற்றது.அடுத்து வரும் தேர்தல்களின் போது வாக்களிப்பு தாதிமை இல்லங்களில் நடைபெறாது என்பதை பிரதமர் அலுவலகம் இன்று கூறியுள்ளது.அந்த முன்னோடி திட்டமானது தாதிமை இல்லங்களில் தங்கியிருப்பவர்கள் வாக்களிப்பதற்காக தொடங்கப்பட்டிருந்தது.
அதனை பரிசீலனை செய்த பின்னர் எதிர் வரும் தேர்தல்கள் தாதிமை இல்லங்களில் வாக்குப்பதிவு நடத்தப்படாது.அதற்கான காரணத்தையும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அவர்கள் ஏன் வாக்காளிக்கிறார்கள் என்பது கூட பலருக்கு புரியவில்லை.இதனால் பல வாக்குகள் செல்லாதவைகளாக கருதப்படுகிறது.ரகசியமாக வாக்காளிக்க வேண்டும் என்பது அவசியம். தாதிமை இல்லங்களில் அதற்கான வசதிகள் இல்லை.
கடந்த ஆண்டு தாதிமை இல்லைங்களில் வாக்குப்பதிவு நடத்த சுமார் 300 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இதனால் பல ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.