Singapore Breaking News in Tamil

திட்டத்தைச் செயல்படுத்த சிங்கப்பூரர்களிடம் வாக்கெடுப்பு!

வீடமைப்பு வளர்ச்சி கழகம் வழங்கிய வீடுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஏப்ரல் 2-ஆம் தேதி தெரிவித்தது.

அதாவது 1986-ஆம் ஆண்டு வரை கட்டி முடிக்கப்பட்ட சுமார் அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் இல்ல மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (HIP) மேம்படுத்தப்பட்டதாக கழகம் தெரிவித்தது.

இதில் 3,20,000 வீடுகள் தகுதி பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு பிளாக்கில் குறைந்தது 75 விழுக்காடு சிங்கப்பூரர்கள் அதற்கு சாதகமாக வாக்களித்தால் மட்டுமே மேம்படுத்தும் பணிகளைச் செயல்படுத்தலாம் என்று கழகம் கூறியது.

கிட்டத்தட்ட 2,83,900 வீடுகளில் முதியோர்களுக்கு துடிப்பான மூத்தோர் மேம்பாட்டு திட்டம் எனப்படும் EASE திட்டத்தின்கீழ் அவர்களுக்கான உகந்த அம்சங்கள் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தது.

அரசாங்கம் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை EASE திட்டத்திற்காக 110 மில்லியன் வெள்ளியையும், இல்ல மேம்பாட்டு திட்டத்திற்காக 3.69 பில்லியன் வெள்ளியையும் செலவழித்தது.