பிலிப்பீன்ஸில் எரிமலை வெடிப்பு…!!!4000 மீட்டர் உயரத்திற்கு வெளிவந்த கரும்புகை…!!!

பிலிப்பீன்ஸில் எரிமலை வெடிப்பு...!!!4000 மீட்டர் உயரத்திற்கு வெளிவந்த கரும்புகை...!!!

பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன.

இதனால் பகுதிகளில் சுமார் 4,000 மீட்டர் உயரத்திற்கு கரும்புகை படர்ந்துள்ளது.

எரிமலை வெடிப்பிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையை சுவாசிப்பதால் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட நோய்கள் ஏற்படக்கூடும்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 24 எரிமலைகளில் கன்லாவோனும் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இது திடீரென வெடித்தது.

இதனால் 4 முதல் 6 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிராமவாசிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பரில், எரிமலை ஒன்று திடீரென வெடித்ததில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான டன் நச்சு வாயுவை வெளியேற்றியது.

இதனால் கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.