ஈக்வடாரில் எரிமலை வெடிப்பு!!

ஈக்வடாரில் எரிமலை வெடிப்பு!!

தென் அமெரிக்காவில் ஈக்வடாரில் கலாபகோஸ் தீவுக் கூட்டத்தில் உள்ள லா கும்ப்ரே எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தீவில் மக்கள் வசிக்காததால் உடனடி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எரிமலையின் செயல்பாடுகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது.

மேலும் இந்த எரிமலை வெடிப்பினால் சுற்றுலா தீவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அது கூறியது.