நியூசிலாந்தில் எரிமலை வெடித்து புகை பரவியதால் விமான சேவை பாதிப்பு…!!!

நியூசிலாந்தில் எரிமலை வெடித்து புகை பரவியதால் விமான சேவை பாதிப்பு...!!!

நியூசிலாந்தின் ஒயிட் ஐலேண்ட் எரிமலை வெடித்துச் சிதறியதில் அப்பகுதியே ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதனால் சாம்பல் கலந்த புகை அப்பகுதியை சூழ்ந்ததாக கூறப்பட்டது.

இந்தச் சூழல் விமான சேவைக்கு இடையூறாக இருந்தது.

விமான நிலையங்களின் ஓடுபாதைகள் தெளிவாக இல்லாததால் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஏர் நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இந்த தீவு பிரபலச் சுற்றுலாத்தலமாக இருந்தது.

அது நியூஸிலந்தின் ஆகப் பெரிய நகரான ஆக்லண்டிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

எரிமலை வெடிப்புச் சம்பவம் 2019ல் நடந்தது. அதில் சுற்றுலா பயணிகள் 22 பேர் பலியாயினர்.

அதன் பிறகு அந்தத் தீவிற்கு சுற்றுலாச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இம்மாத தொடக்கத்தில் இருந்தே எரிமலையில் வெடிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலை அடுத்த சில வாரங்களுக்கு தொடரலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பின் விளைவாக நியூசிலாந்தின் பிரதான தீவில் வசிப்பவர்கள், சுவாசப் பிரச்சனை,கண் மற்றும் தொண்டை எரிச்சலை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.