ராக்கெட் வேக சார்ஜிங் வசதியுடன் சம்பவம் செய்ய வருது Vivo X200S...!!!
Vivo X200S போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் கேமரா, டிஸ்ப்ளே, சிப்செட், பேட்டரி மற்றும் கலர் வகைகள் குறித்த விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானதை அடைத்து, தற்போது வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Vivo X200S போனில் நாம் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் மற்றும் அதன் விலை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இது முதலில் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இது ஏப்ரல் 21 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் வண்ண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Vivo X200S போனின் அம்சங்கள்:
இது Zeiss optics உடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது மென்மையான ஊதா மற்றும் புதினா பச்சை வண்ணங்களிலும் கிடைக்கும்.
மேலும், இது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. இந்த விவரங்கள் இணையத்தில் வெளிவந்த டீஸர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
Vivo X200s போனின் விவரக்குறிப்புகள்:
இந்த Vivo போன் 6.67-இன்ச் BOE Q10 AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 1.5K தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. இது மிகவும் குறுகிய பெசல் வடிவமைப்புடன் வருகிறது.
Octa Core MediaTek Dimensity 9400+ SoC சிப்செட் மற்றும் Android 15 OS வருவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.Zeiss optics உடன் கூடிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. எனவே, 50MP பிரதான கேமரா + 50MP அல்ட்ரா-வைட் கேமரா + 50MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.
பிரதான கேமராவில் சோனி IMX9121 சென்சார் + OIS தொழில்நுட்பம் உள்ளது. அல்ட்ரா-வைட் கேமராவில் சாம்சங் GN1 சென்சார் உள்ளது. அதேபோல், பெரிஸ்கோப் டெலிஃபோட்டோவில் சோனி LYT 600 சென்சார் மற்றும் OIS தொழில்நுட்பம் உள்ளது. 3X ஆப்டிகல் ஜூம் எதிர்பார்க்கலாம்.
இந்த Vivo X200s போனில் உள்ள பேட்டரி சிஸ்டம் மிகவும் பிரீமியமாகத் தெரிந்தது. ஏனெனில் இந்திய சந்தையில் முந்தைய மாடலானVivo X200 போனில் 5,700mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் இருந்தது. ஆனால், வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கவில்லை.இருப்பினும், பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த தொலைபேசியில் 6,200mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி 90W வேகமான சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. பிரீமியம் மாடலாக இருப்பதால், இந்த போன் IP69 வாட்டர் ரேட்டிங் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மதிப்பீட்டை கொண்டுள்ளது.Vivo X200s போன் நடுத்தர பட்ஜெட் விலையில் வெளியாக உள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan