Singapore Breaking News in Tamil

சிங்கப்பூருக்கு வருபவர்கள் கண்டிப்பாக நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பொருட்களுக்கு வரி செலுத்திருக்க வேண்டும்!

சாங்கி விமான நிலையத்தில் 115 பயணிகள் பிடிபட்டுள்ளனர்.அவர்கள் தீர்வை, வரி செலுத்தபடும் பொருட்களைப் பற்றி தகவல் தெரிவிக்க தவறியதற்காக பிடிப்பட்டனர்.அதனைச் சிங்கப்பூர் சுங்கத்துறையும் , குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையமும் இன்று(மே-29) தெரிவித்தது.

சிகரெட்,புகையிலை, மதுபானம் உள்ளிட்ட பொருட்களுக்கு அவர்கள் வரி கட்டவில்லை. அதைப் பற்றி தெரிவிக்கவும் இல்லை என்று கூறின.

சிங்கப்பூர் சுங்கத்துறையும்,குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து மே-15 ஆம் தேதியிலிருந்து மே-29 ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் ஆண் ஒருவர், அவரும் அவரது காதலியும் வெளிநாட்டில் வாங்கிய அறிவிக்கப்படாத ஐந்து ஆடம்பரப் பைகளுடன் பிடிபட்டார்.அபராதமும் விதிக்கப்பட்டது.

ஐந்து பைகளின் மதிப்பு S$13,825 மற்றும் சம்பந்தப்பட்ட GST தொகை S$1,106 ஆகும்.

சிங்கப்பூர் பெண் ஒருவர் அறிவிக்கப்படாத சொகுசு கடிகாரம் மற்றும் ஒரு சொகுசு பையுடன் கண்டுபிடிக்கப்பட்டார், இதன் மொத்த மதிப்பு S$5,637. சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி தொகை S$450.96.

வேலை அனுமதி வைத்திருந்த ஒரு நபர் தான் வைத்திருந்த மதுபானத்திற்கு கலால் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக பொய்யான தகவலைக் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

சிங்கப்பூர் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பயணிகள் தங்கள் வரி அல்லது ஜிஎஸ்டி பொருட்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு மற்றும் பணம் செலுத்த வேண்டும்.

வந்தவுடன் பணம் செலுத்த விரும்பும் பயணிகள், சுங்க வரி செலுத்தும் அலுவலகத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் செலுத்தலாம்.

இவற்றைப் பற்றித் தெரியாதவர்கள், சுங்க வரி செலுத்தும் அலுவலகத்தில் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகளை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிங்கப்பூர் சுங்கத் தொலைபேசி எண் 6355 2000 மூலம் பொதுமக்கள் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

அதன் இணையதளத்தைப் பார்த்தும் அவர்கள் தகவல்களைப் பெறலாம்.