செப்டம்பர் மாதம் சிங்கப்பூருக்கு போப் பிரான்ஸின் வருகை!!

செப்டம்பர் மாதம் சிங்கப்பூருக்கு போப் பிரான்ஸின் வருகை!!

செப்டம்பர் 11 முதல் 13 வரை போப் பிரான்சிஸ் சிங்கப்பூருக்கு வருகை புரிவார் என்பதை சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் தெரிவித்துள்ளது.

போப் ஆண்டவர் வருகை குறித்து கட்டங்கட்டமாக உகந்த நேரத்தில் அறிவிக்கப்படும்.

போப் ஆண்டவர் கடைசியாக 1986 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போப் பிரான்சிஸ் அவர்களின் வருகை சிங்கப்பூரில் உள்ள அனைத்து கத்தோலியர்களையும் சந்தோஷப்படுத்தும் என்றும்,முக்கியமாக அனைவரையும் ஒன்றிணைக்கும்.

அவர் வருகை புரியும் போது, நாம் ஒரே சமூகமாக இருந்து அவருடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வோம்.மேலும் அவருடைய கருணை நிறைந்த வருகையை இறைவனிடம் வேண்டுவோம் என்று கூறினார்.
87 வயதான போப் பிரான்சிஸ் வருகை பல மாதங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.