உஷ்... அட மீண்டும்.. மீண்டுமா... யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி...
அகமதாபாத்: அகமதாபாத்தில் மே 22-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,ஆர் சி பி அணியும் பலப்பரீட்சை நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த ஆர் சி பி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நன்றாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 6 பந்து மீதம் இருக்கையில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்யாசத்தில் ஆர் சி பி அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
தொடக்கம் முதலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தடுத்து 4 தோல்விகளை கண்டது. ஆனால் ஆர் சி பி அணியானது தான் விளையாடிய 16 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் மே -22 ஆம் தேதி நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி
தன் அணியின் இளம் வீரரான யாஷ் தயாளை கண்டபடி திட்டியுள்ள சம்பவம் குறித்த வீடியோ ஆன்லைனில் வேகமாக பரவியது.
அது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இது குறித்து வர்ணனையாளர் ஷர்ஷா போக்ளே கூறியதாவது,கோலி யாஷ் தயாலிடம் ஆக்ரோசமாக நடந்து கொண்டதை பார்க்க முடிந்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது யாஷ் தயாளுக்கு 17 வது ஓவர் கொடுக்கப்பட்டது.
அதில் ஹெட் மயர் 2 பவுண்டரிகளை அடிக்க அந்த ஓவரில் மட்டும் அவர் மொத்தம் 11 ரன்களைச் சேர்த்தார். இதனால் கடுப்பான விராட் கோலி
பவுண்டரி லைனில் நின்று கொண்டு அவரை கண்டபடி திட்டினார்.இது ரசிக்கும் படியாக இல்லை என்றும், இளம் வீரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கோலி தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதனால்தான் விராட் கோலியை விட எம் எஸ் தோனிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமிருக்கிறது என்று கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற உள்ள 2 வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றால் இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலபரீட்சை நடத்தும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg