அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!!

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ...!!!

அமெரிக்காவின் கான்ஸஸில் உள்ள செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண் குரங்கு பிறந்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மணி நேரம் கழித்து தாய் குரங்கு மஹாலே தனது குழந்தையைச் சந்திக்கும் வீடியோவை செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலை அதன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது.

அந்த அழகான குட்டி பெண் குரங்கின் பெயர் கெயான்ஸா.

இது மஹாலேவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த இரண்டாவது குழந்தையாகும்.

இதற்கு முன்பு, குசேஸா என்ற ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் பிறந்த 5 வாரங்களுக்குப் பிறகு அது ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தது.

புதிதாகப் பிறந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்.

மஹாலேவும் அதன் பெண் குழந்தை கெயான்ஸாவும் ஒன்றாக உல்லாசமாக இருக்கும் வீடியோவைப் பார்த்து பலர் மகிழ்ச்சியடைந்தனர்.

தாய் குரங்கிற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மஹாலேக்கு மொத்தம் 4 குழந்தைகள் உள்ளது.

சிம்பன்ஸி குரங்கினத்திற்கு பெரும் பங்களிப்பாளராக இருக்கும் மஹாலே தற்போது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan