Singapore News in Tamil

சிங்கப்பூரின் விதிகளை மீறினால் தண்டனை நிச்சயம்!

35 வயதுடைய Muhhamad Taufiq Hidayat Kamsin சிங்கப்பூரில் தனது வீட்டு முகவரியை மாற்றிய அந்த தகவலை 28 நாட்களுக்குள் ICA விடம் தெரிவிக்க தவறியுள்ளார்.நகர சீரமைப்பு ஆணையம் கடந்த 2022-ஆம் ஏப்ரல் முதல் தேதி ICA விடம் புகார் அளித்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அந்த குற்றத்திற்காக அவருக்கு 3,700 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் அதைச் செலுத்த தவறினால் 10 நாட்கள் சிறைக்கு செல்ல வேண்டிவரலாம்.

ஏற்கனவே அவரைக் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் அப்போது அவருடைய வீட்டில் இல்லை.அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அவர் கிடைக்கவில்லை என்று CNA கூறியது.

போக்குவரத்து காவல்துறையில் நிலுவையில் இருந்த வழக்கை முடிப்பதற்காக இவ்வாண்டு மார்ச் மாதம் அதன் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் போது சரணடைந்தார்.

அவர் பல்வேறு சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக வீட்டை மாற்றியுள்ளார் என்பது தெரிய வந்தது.

தேசிய பதிவுச் சட்டத்தின்கீழ் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது வீட்டின் முகவரியை மாற்றினால் 28 நாட்களுக்குள் ICA-விடம் தெரிவிக்க வேண்டும்.

தெரிவிக்க தவறினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது 5,000 வெள்ளி வரை விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.