தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராகவும் மக்களால் ‘தளபதி’ என்றும் செல்லமாக அழைக்கப்படும் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் எந்த படத்தில் நடித்தாலும் அது ஹிட்டு தான் என்ற லெவலில் தான் தற்பொழுது அவர் மாஸ் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தாவது மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாக அழைத்து விருது கொடுத்து, அதற்கு மேல் விருந்தும் கொடுத்து தமிழ்நாட்டையே அசத்தினார். அந்த வாரம் முழுவதும் அவருடைய புகைப்படங்கள் தான் இணையதளத்தில் டிரெண்ட் ஆகின.
மேலும் அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வெளிவந்தன. பலர் இதனை வெளிப்படையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில் தற்பொழுது இதைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ள. லியோ படத்தின் சூட்டிங் காட்சிகள் ஆனது முடிவடைந்து விட்டன என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
படப்பிடிக்கும் முடிந்ததும் விஜய், அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. விஜய் காரில் இறங்கி அலுவலகத்திற்குள் செல்லும் வீடியோவும் இணையதளத்தில் பெயரலாக பரவி வந்தன. இந்நிலையில் அவர் நிர்வாகிகளிடையே என்ன கூறினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் “நான் அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிக்க மாட்டேன்” என்று விஜய் கூறியுள்ளதாக தகவல்களை பரவி வருகின்றன. விஜய் தனது வாயால் தனது ரசிகர்களிடம் இவ்வாறு கூறியுள்ளது என்ற செய்தி தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த செய்தி உண்மையா என்பதை அவர் தெரிவிக்கும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.