அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!!

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!!

அமெரிக்க விதித்துள்ள 46 சதவீத வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வியட்நாம் கோரியுள்ளது.

முதல் காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்ததால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி உற்பத்தி நாடுகளில் வியட்நாமும் ஒன்றாகும்.

வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 6.93% வளர்ச்சியடைந்துள்ளது.இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 7.55% ஆக இருந்தது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா அதன் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருந்தது.

அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் வியட்நாம் திணறி வருகிறது.

இதனால் ஜனாதிபதி தோ லாம் குறைந்தது 45 நாட்களுக்கு ஒத்திவைக்கக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த துணைப் பிரதமர் ஹோ டக் பொக்கை நியமித்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மே மாத இறுதியில் திரு. டிரம்பை சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version