சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தால் பகிரப்பட்ட வீடியோ!! இணையத்தில் வைரல்!!

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தால் பகிரப்பட்ட வீடியோ!! இணையத்தில் வைரல்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற
ஹங்கிரிலா உரையாடலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உரையாடலின் போது அவர்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பேசிப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் அது தொடர்பான நகைச்சுவை வீடியோ ஒன்றை அதன் டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது.

18 வினாடி கொண்ட அந்த காணொளியானது “தற்காப்பில் ஆண்கள்” என்ற வரியுடன் இடம் பெற்றது.

அந்த காணொளி 1.2 மில்லியனுக்கு அதிகமானோரால் பார்வையிட்டும், நூற்றுக்கும் மேற்பட்டோரால் பகிரடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் கலந்துரையாடலுக்கு வந்திருந்த மேயர்கள் சிலர் அவர்களின் சீருடைகளை அணிந்து புகைப்படம் எடுப்பதற்கு கேமராவிற்கு முன் வந்து நின்றனர்.

சிங்கப்பூர் ,ஓமன், ஜெர்மனி, நியூசிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மேயர்கள் வீடியோவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த உரையாடலில் 45 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மேயர்கள் பங்கேற்றதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த இணைவாசிகள் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் அதில்,

வெவ்வேறு நாடுகளின் சீருடைகளை பார்ப்பதற்கு மிக அழகாகவும் நன்றாகவும் உள்ளது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சிலர் இது போன்ற வீடியோவை முதலில் பதிவு செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதிய அணுகுமுறைகளை பயன்படுத்த முயற்சிப்பதாக அமைச்சகம் தெரிவித்தது.