சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்...!!!
சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவின் புதுடெல்லி பயணம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அவர் தனது பயண அனுபவத்தை வீடியோவில் பதிவு செய்து, “டெல்லியில் தவிர்க்க வேண்டியவை” என்ற தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார்.
அதில் அவர் 3 விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
முதலில், இரவில் டாக்சிகளில் செல்வதைத் தவிர்க்கச் சொன்னார்.
அவரும் அவரது நண்பரும் இரவில் டெல்லியை அடைந்தனர்.
Uber வாடகை காரைக் கண்டுபிடிக்க முடியாததால், டாக்ஸியில் செல்ல முடிவு செய்தனர்.
பயணக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தியிருந்தாலும், பயணத்தின் முடிவில் கூடுதலாக 200 ரூபாய் செலுத்துமாறு வாடகைக் கார் ஓட்டுநர் தன்னிடம் கேட்டதாகக் கூறினார்.
அதுமட்டுமின்றி டாக்சி டிரைவர் அவர்களை வேறொரு இடத்தில் இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக, அவர் ரிக்ஷாக்காரர்களிடம் தொலைபேசி எண்களைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மூன்றாவதாக, இந்தியாவில் டெபிட் கார்டுகளை விட ரொக்கம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
வணிகர்கள், குறிப்பாக சாலையோரக் கடைகளை வைத்திருப்பவர்கள், பணத்தை விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவராலும் பகிரிடப்பட்டு வருகிறது.
Follow us on : click here