பூமிக்கு மிக அருகில்.. சிங்கப்பூரின் புதிய செயற்கைக்கோள் அறிமுகம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பூமியிலிருந்து குறைவான உயரத்தில் சுழலக் கூடிய புதிய செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதனை ஆய்வு நிலையத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பார்வையிட்டார்.
இந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவரும்.
சிறிய குளிர்சாதனப் பெட்டி போன்ற அளவுடைய இந்த புதிய செயற்கைக்கோள் 180 கிலோ எடை கொண்டது.
ELITE என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளானது பூமியை மிகக் குறைந்த உயரத்தில் இருந்து புகைப்படம் எடுக்க முடியும்.
இது அடுத்த ஆண்டு நிறைவடையும் போது நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here