வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க?

வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்பது பலரது கனவு.ஆனால் அனைவரும் அவ்வளவு எளிதில் அவர்களுடைய கனவை நிறைவேற்ற முடியாது.அதற்கு கரணம் அவர்களின் கனவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபடுவதே.அதே போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.இளைஞர்களை எப்படி அவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பதை பற்றியும் நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்பதிவில் காண்போம்.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள இன்ஃபினிட்டி டிராவல்ஸ் & அசோசியேட்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர்கள் அவர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.அதன் பின் சிங்கப்பூர் நிறுவனத்தின் அதிகாரி என்று கூறி அவர்களுக்கு வாட்ஸாப் காலில் அந்த டிராவல்ஸ் நிறுவனம் இன்டெர்வியூ ஏற்பாடு செய்துள்ளது.அந்த இன்டெர்வியூவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி இரண்டு பிரிவாக பிரித்து காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை ஆஃபர் லெட்டர் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.அப்போது ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் உங்கள் சம்பளத்தில் மீதமுள்ள பணம் பிடித்தம் செய்யப்படும் கூறியுள்ளனர்.அவர்கள் கூறியதை நம்பி பணத்துடன் வந்த இளைஞர்களுக்கு ஆஃபர் லெட்டரை வழங்கி பின் பணத்தையும் பெற்றுள்ளனர்.அது மட்டுமல்லாமல் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு காலை உணவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.ஆஃபர் லெட்டரை பெற்ற இளைஞர்களில் சிலர் ஆஃபர் லெட்டரில் குறிப்பிட்டுள்ள இ-மெயில் ஐடி ,நிறுவனத்தின் முகவரியை உண்மையானதா? போலியானதா? என்பதை சரிபார்த்துள்ளனர்.ஆஃபர் லெட்டர் போலியானது என்று தெரிந்தவுடன் பணத்தை கட்டியவர்கள் அந்த டிராவல்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.பணத்தை கட்டிய இளைஞர்களில் சிலர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.காவல்துறை அதன்பின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாரதிராஜாவை கைது செய்தனர்.சுமார் 70 க்கு மேற்பட்டவர்களிடம் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி மூலமாக தான் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள்.நீங்கள் எந்த ஏஜென்சி மூலமாக செல்ல உள்ளீர்களோ அது உரிமம் பெற்றிருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் கவனிக்க வேண்டியவை :
ஆஃபர் லெட்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் வெப்சைட்,இ-மெயில் ஐடி ஆகியவற்றின் கடைசியில் .sg அல்லது .com.sg என்று இருக்க வேண்டும்.வேறு மாதிரி இருந்தால் அது போலியானது.
முதலில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்துங்கள் நீங்கள் சிங்கப்பூர் சென்ற பிறகு மாதத்தவணையாக கட்டுங்கள் அல்லது உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் கூற மாட்டார்கள். உங்களுக்கான ip ,விசா வந்ததுக்கு பிறகே பணத்தை செலுத்துமாறு அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் கூறுவார்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan