சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கான ஏல குத்தகை நடைபெற்றது.
பெரிய கார்களுக்கும்,பொது பிரிவுக்குமான வாகனங்களுக்கும் உரிய கட்டண ஏல குத்தகையாகும்.
மோட்டார் சைக்கிள்களுக்கு தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளுக்கும் கட்டணங்கள் கூடியுள்ளது.இருந்ததோ 1933 வாகன உரிமை சான்றிதழ்கள் , ஆனால் வந்த விண்ணப்பங்களோ மொத்தம் 2722.
சிறிய கார்களுக்கு 101,000 வெள்ளிக்கு உயர்ந்துள்ளது. இதற்குமுன் 100,000 வெள்ளி ஆக இருந்தது.
பெரிய கார்கள் அல்லது மின்கார்களுக்கு 134,889 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்குமுன் 129,890 ஆக இருந்தது.இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
பொது பிரிவில் 137000 வெள்ளி கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வாகனங்களுக்கு 82,889 வெள்ளி.
மோட்டார் சைக்கிள்களுக்கு 10,901 வெள்ளியாக குறைந்துள்ளது.இதற்குமுன் 11,402 ஆக இருந்தது.