சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, இதனைக் குறைக்கும் வழிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் இது சூழல் ஏற்படும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டனர்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக சட்ட,உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பதிலளித்தார்.
- கடந்த 2022-ஆம் ஆண்டில் விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 1,687.
- இதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டில் விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்து எண்ணிக்கை 1,155.
- கடந்த 2020-ஆம் ஆண்டு விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்து எண்ணிக்கை 1,039.
- கடந்த 2019-ஆம் ஆண்டில் விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 1,889.
- கடந்த 2018-ஆம் ஆண்டில் விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 1,752.
விரைவு சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வாகனம் ஓட்டும்போது விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் விபத்துகள் ஏற்படுகிறது.
வாகன ஓட்டுநர்கள் முறையாக போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறு போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தி இருக்கிறது.
போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றினால் விபத்துகள் நேராமல் தடுக்கலாம் என்றும் கூறினார்.