சிங்கப்பூரில் மூடப்படும் தடுப்பூசி நிலையங்கள்!! வேறு எங்கு தடுப்பூசி போடலாம்?

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்பான பரிந்துரைகளில் சில மாற்றங்கள் செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட JN.1 ரக Pfizer -BioNTech Comirnaty, JN.1 ரக Moderna/Spikevax ஆகிய தடுப்பு மருந்துகள் மக்களுக்கு அக்டோபர் 28 ஆம் தேதி வழங்கப்படும்.தடுப்பூசி திட்டத்திற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுப் பரிசோதனை எனும் JTVC தடுப்பூசி நிலையங்களில் தற்போது 5 மட்டுமே செயல்பட்டு வருகிறது.அவை வரும் டிசம்பர் முதல் தேதி மூடப்படும்.

10 பலதுறை மருந்தகங்கள் மற்றும் சுமார் 500 தனியார் மருந்தகங்களில் கோவிட் -19 தடுப்பூசி போட்டுகொள்ளலாம்.

கோவிட்-19 தடுப்பூசியை 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இரண்டு முறை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது ஒரு முறை போட்டுகொண்டால் போதும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6 மாதம் மற்றும் அதற்குமேல் வயதுள்ள பிள்ளைகளுக்கு மீண்டும் தடுப்பூசி போட விரும்பினால் குறைந்தது 5 மாதங்கள் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோவிட்-19 தடுப்பூசிகளை எங்கு போட்டு கொள்வது என்பது குறித்த தகவல்களை http://gowhere.gov.sg/vaccine இதில் காணலாம்.