Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் வீட்டுப் பொருட்களுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு அதிகரிப்பு!

சிங்கப்பூரில் பயனீட்டாளர் விலைக் குறியீடு ஆண்டுதோறும் கணக்கிடப்படும். முற்பகுதி பிற்பகுதி ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படும். கடந்த 2022-ஆம் ஆண்டு பிற்பகுதியில் வீட்டுப் பொருட்களின் பயனீட்டாளர் விலைக் குறியீடு 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முற்பகுதி 5.2% ஆக அதிகரித்துள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு பிற்பகுதி 7% ஆக அதிகரித்துள்ளது.

2022-ஆம் ஆண்டின் பிற்பகுதி அடிப்படையில் கணக்கிடப்பட்டவைகள். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5.9% ஆக அதிகரித்துள்ளது. நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 6.8% ஆக அதிகரித்துள்ளது. அதிக வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 7.5% ஆக அதிகரித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு முழுமை அடிப்படையில் பயனீட்டாளர் விலை குறியீடு கணிக்கப்பட்டது.அதில், வீட்டு பொருட்களுக்கான விலை குறியீடு 6.1% அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டில் 2.3% அதிகரித்துள்ளது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் அனைத்துப் பொருட்களுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு கணக்கிடப்படுகிறது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5.8% சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 6.8% சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு பிற்பகுதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம்.

இதில் கார், உணவு, தங்குமிட செலவுகள், விடுமுறை செலவுகள், பெட்ரோல், போக்குவரத்து, மின்சாரக் கட்டணங்கள் முதலியவை அடங்கும்.