முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய வடித்த கஞ்சியுடன் இதை பயன்படுத்துங்க…!!

முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய வடித்த கஞ்சியுடன் இதை பயன்படுத்துங்க...!!

முகத்தில் சிலருக்கு கருந்திட்டு போல தோன்றுவது உண்டு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது.சரும பிரச்சனைகளில் ஒன்றான கருந்திட்டை போக்க இந்த பயனுள்ள வீட்டு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

✨️ வடிகட்டிய கஞ்சி – சிறிதளவு

✨️ மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

✨️ பசு வெண்ணெய் – 25 கிராம்

செய்முறை விளக்கம்:-

👉முதலில் 25 கிராம் வெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

👉பின்னர் 50 மில்லி அளவு வடித்து ஆறவைத்த கஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.

👉பின்னர் இந்த கஞ்சியில் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

👉பின்னர் அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும்.

👉இதை கருந்திட்டு உள்ள இடத்தில் தடவி நன்றாக தேய்க்கவும்.

👉இரண்டு மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கருந்திட்டு பிரச்சனை குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

✨️ திப்பிலி – 10 கிராம்

✨️ தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

👉 நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 10 கிராம் திப்பிலியை எடுத்துக் கொள்ளவும்.

👉 இந்த திப்பிலியை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். பின்னர் அதை ஆறவைத்து பொடியாக அரைக்கவும்.

👉 பின்னர் இந்த திப்பிலி பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து, நன்கு கலந்து கருந்திட்டு உள்ள இடத்தில் தடவவும்.

👉 இரண்டு மணி நேரம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

👉 இதைத்தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால் கருந்திட்டு தானாகவே மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

✨️ வேப்ப இலைகள் – ஒரு கப்

✨️ கஸ்தூரி மஞ்சள் கிழங்கு – ஒன்று

✨️ குப்பைமேனி இலைகள் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

👉 முதலில் வேப்ப இலைகள் மற்றும் குப்பைமேனி இலைகளை வெயிலில் உலர்த்தி நன்றாக காய வைக்கவும்.

👉 பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் மஞ்சள் கிழங்கைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

👉 இந்தப் பொடியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சேமித்து வைக்கவும்.

👉 அடுத்து, ஒரு கிண்ணத்தை எடுத்து, தேவையான அளவு அரைத்த பொடியைச் சேர்க்கவும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

👉 இதை முகத்தில் கருந்திட்டு உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.