அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!!
அமெரிக்காவின் தெற்கு கரோலைனாவில் உள்ள யாமசீயில் உள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளது.
ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது.
இந்நிலையில் ‘rhesus macaque’ வகை குரங்குகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தப்பி ஓடின.
ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஊழியர் கதவை பூட்ட மறந்ததால் குரங்குகள் தப்பியதாக கூறப்படுகிறது
குரங்குகள் தப்பித்ததால் நகரில் வசிப்பவர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குரங்குகளுக்கு உணவு அளித்து தேட குழுக்கள் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குரங்குகளைப் பார்ப்பவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரங்குகளை மக்கள் அணுக வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்தது.
தப்பி ஓடிய அனைத்தும் பெண் குரங்குகள் என்றும், சோதனையில் அவை பயன்படுத்தப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg