பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!!

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!!

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் அறிவித்த புதிய வரிகளால் உலக நாடுகளின் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

வரி விதிப்பதை நிறுத்தி வைக்கும் திட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பல நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்பு கொள்வதாகவும் தகவல் வெளிவருகிறது.

சீனாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியை தொடர்ந்து பதிலடி வரியை சீனா அமெரிக்காவுக்கு விதித்துள்ளது.

சீனா விதித்த பதிலடி வரியை விலக்கா விட்டால் அந்த நாட்டுக்கு மேலும் 50 சதவீத வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா நிறுவனங்கள் சில பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.அவர் கூடுதல் வரியை விதித்தால் அந்த நிறுவனங்கள் 104 சதவீத வரியை செலுத்த வேண்டி வரும்.இந்த தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது.

Exit mobile version