கலிபோர்னிய மாநிலத்தில் சீன புத்தாண்டு அன்று துப்பாக்கிச் சம்பவம் நடைபெற்றது. மறுநாள் வேறொரு இடத்தில் துப்பாக்கிச் சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கிச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் 19 பேர்.
துப்பாக்கிச் சம்பவங்களில் பெரும்பான்மையாக ஆசிய- அமெரிக்கர்களைக் குறி வைத்து தாக்குகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நாடாளுமன்றம் குறிப்பிட்ட துப்பாக்கிகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
குறிப்பிட்டத் துப்பாக்கிகளுக்கானத் தடை விதிக்கும் மசோதா கடந்த 2004-ஆம் ஆண்டு காலாவதியானது. இதில் தானியக்க துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் முதலியவை அடங்கும்.
குறிப்பிட்ட 19 ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆயுதங்கள் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளில் இருக்கும் சில அம்சங்களைக் கொண்டு இருக்கும். இதன் காரணமாக 19 ஆயுதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டத் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கும் மசோதாக்கு மீண்டும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.